என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » விநாயகர் சிலைகள்
நீங்கள் தேடியது "விநாயகர் சிலைகள்"
விநாயகர் ஊர்வலம் முடிவடைந்ததை தொடர்ந்து செங்கோட்டை, தென்காசி தாலுகாவில் போடப்பட்டிருந்த 144 தடை உத்தரவு இன்று காலையுடன் விலக்கிக்கொள்ளப்பட்டது. #VinayagarChaturthi
செங்கோட்டை:
நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி நேற்று முன்தினம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. வீரவிநாயகர் சிலையை அப்பகுதியில் உள்ள ஓம்காளி மைதானத்தில் பிரதிஷ்டை செய்வதற்காக பொதுமக்கள் மற்றும் அனைத்து சமுதாயத்தினர் ஊர்வலமாக கொண்டு சென்றனர்.
மேலூர் பகுதியில் ஊர்வலம் சென்றபோது அப்பகுதியை சேர்ந்த சிலர் அந்த வழியாக ஊர்வலம் செல்ல எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் ஊர்வலம் போலீஸ் பாதுகாப்போடு செல்ல முயன்றபோது இரு தரப்பினர் இடையே மோதல் உண்டானது. பலர் காயம் அடைந்தனர். வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
இதனால் செங்கோட்டை பகுதியில் பதட்டம் நிலவியது. நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமையில் அதிகாரிகள் செங்கோட்டையில் முகாமிட்டு இரு தரப்பினரிடமும் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தினர். தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன், நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கர், நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார், நெல்லை மாநகர துணை கமிஷனர் (சட்டம்ஒழுங்கு) சுகுணா சிங் ஆகியோரும் வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்தனர்.
தொடர்ந்து மாலையில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து சென்று கரைக்க ஏற்பாடுகள் நடைபெற்றன. இந்து அமைப்பினர் மற்றும் அனைத்து சமுதாய கூட்டமைப்பினர் ஆலோசனை நடத்தி ஊர்வலத்துக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதனால் 2-வது நாளாக நேற்றும் அப்பகுதியில் பதட்டம் நிலவியது. மேலும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க செங்கோட்டை, தென்காசி தாலுகா பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. தென்காசி, கடையநல்லூர், செங்கோட்டை பகுதியில் 11 டாஸ்மாக் மதுக்கடைகள் மறு உத்தரவு வரும்வரை மூடப்பட்டன.
இந்த நிலையில் நேற்று மாலை செங்கோட்டையில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. இதையொட்டி செங்கோட்டை நகர் முழுவதும் சுமார் 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து விநாயகர் சிலைகள் ஊர்வலத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. செங்கோட்டை வண்டி மறிச்சம்மன் கோவில் திடல் முன்பு உள்ள ஓம் காளி திடலுக்கு வேன், லோடு ஆட்டோ, ஆட்டோக்கள் மூலம் 7 விநாயகர் சிலைகள் கொண்டு வரப்பட்டன. இதைத்தொடர்ந்து மதியம் 1.30 மணிக்கு மேளதாளங்கள் முழங்க விநாயகர் சிலைகள் ஊர்வலமாக புறப்பட்டன.
ஊர்வலம் செல்வவிநாயகர் கோவில் தெரு, தாலுகா அலுவலகம், மேலூர் வழியாக பம்ப் ஹவுஸ் ரோடு பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென்று ஊர்வலத்தில் வந்தவர்கள் மீது கற்கள் வீசப்பட்டன. பதிலுக்கு அவர்களும் கற்களை வீசினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அங்கு நின்ற வஜ்ரா வாகனம் மீதும் கல்வீசப்பட்டது. அவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். இந்த கல்வீச்சு சம்பவத்தில் 4 பேர் காயம் அடைந்தனர். மேலும் மோட்டார் சைக்கிள்கள், கார்கள், போலீஸ் வாகனங்கள் தாக்கப்பட்டன. தகவல் அறிந்த தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன் அங்கு விரைந்து வந்தார். அவரது காரும் கல்வீசி தாக்கப்பட்டது. இதில் அந்த கார் சேதம் அடைந்தது. இதையடுத்து அவர் இருதரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.
இதனிடையே ஊர்வலம் நடந்துகொண்டிருந்தபோது மேலூர் சேனைத்தலைவர் விநாயகர் கோவில் தெருவில் உள்ள சுப்பையா என்பவரின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அந்த குண்டு வீட்டின் ஜன்னல் பகுதியில் விழுந்தது. இதனால் மரக்கதவு தீப்பிடித்து எரிந்தது. ஆட்டோவில் வந்த 3 பேர், வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசியதாக கூறப்படுகிறது.
அவர்கள் பெட்ரோல் குண்டு வீசியதும் ஆட்டோவை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டனர். இதையடுத்து அந்த ஆட்டோவை அப்பகுதி மக்கள் அடித்து நொறுக்கினர். இந்த சம்பவத்தை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு மறியலில் ஈடுபட்டார்கள். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஊர்வலம் மேல பஜார் பகுதியில் வந்தபோது மீண்டும் கல்வீச்சு சம்பவம் நடந்தது. அப்பகுதியில் கலெக்டர் ஷில்பா நின்று கொண்டு, ஊர்வலத்தை ஒழுங்குபடுத்தி கொண்டிருந்தார். அவரது கார் மீதும் கற்கள் விழுந்தன. மேலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த அம்பை டி.எஸ்.பி. ஜாகீர் உசேன் காரும் கல்வீசி தாக்கப்பட்டது. மேலும் அங்குள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டின் கண்ணாடி அடித்து நொறுக்கப்பட்டது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதையடுத்து போலீசார் மீண்டும் தடியடி நடத்தி அங்கிருந்தவர்களை கலைத்தனர்.
பின்னர் ஊர்வலம் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. ஊர்வலத்தில் வந்தவர்களும், எதிர்தரப்பினரும் கலெக்டரிடம் மாறி மாறி புகார் செய்தனர். அதற்கு அவர் யார் மீது தவறு இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதைத்தொடர்ந்து ஊர்வலம் அங்கிருந்து புறப்பட்டு, காசி கடை தெரு, கீழ பஜார், போலீஸ் நிலையம் வழியாக இரவு 7.30 மணியளவில் செங்கோட்டை நகரின் எல்லையான குண்டாற்றை வந்தடைந்தது.
அங்கு ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. செங்கோட்டை பகுதியில் 3-வது நாளாக இன்றும் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது. நகர் முழுவதும் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். போலீசார் ரோந்து சுற்றிவந்தும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.
விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை தொடர்ந்து செங்கோட்டை பகுதியில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஆட்டோக்கள் ஓடவில்லை. இன்று செங்கோட்டையில் கடைகள் திறக்கப்பட்டன. இயல்புநிலை திரும்பியது. ஆட்டோக்கள் வழக்கம்போல் ஓடின. எனினும் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள். இதனிடையே ஊர்வலம் முடிவடைந்ததை தொடர்ந்து செங்கோட்டை, தென்காசி தாலுகாவில் போடப்பட்டிருந்த 144 தடை உத்தரவு இன்று காலையுடன் விலக்கிக்கொள்ளப்பட்டது. இதனிடையே ஊர்வலத்தில் கல்வீசியது, பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக செங்கோட்டை பகுதியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்து வருகிறார்கள். செங்கோட்டை போலீஸ் நிலையத்தில் அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. #VinayagarChaturthi

விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னையில், 2500 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து பிரதிஷ்டை செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. #VinayagarChathurthi
சென்னை:
விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னையில் 2500 இடங்களில் சிலைகளை வைத்து வழிபடுவதற்கு போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.
விநாயகர் சிலைகளை வைப்பதற்கு இந்த ஆண்டு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சிலைகளை வைத்து வழிபடுவதற்கு விழா குழுவினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களும், பொதுநல அமைப்பினரும் விநாயகர் சிலைகளை வைக்கிறார்கள்.
இந்த சிலைகளுக்கு தினமும் பூஜைகள் செய்யப்படும். இதன் பிறகு குறிப்பிட்ட நாட்களில் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படும்.
எந்தெந்த தேதிகளில் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கு அனுமதி அளிக்கலாம் என்பது பற்றி போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இது பற்றி இன்று மாலை முடிவெடுக்கப்பட இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
விநாயகர் சிலைகளை வைப்பவர்கள் போலீசாருடன் இணைந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விழாக் கமிட்டியினருக்கு பல்வேறு ஆலோசனைகளும் அளிக்கப்பட்டுள்ளது. இதனை கண்டிப்பாக விழா குழுவினர் பின்பற்ற வேண்டும். #VinayagarChathurthi

விநாயகர் ஊர்வலம் மற்றும் சிலைகள் கரைப்பு தொடர்பான நிபந்தனையை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்குகளை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. #GaneshChaturthi #GaneshIdols #HC
சென்னை:
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது விநாயகர் சிலைகள் வைக்க ஒற்றை சாளர முறைப்படி, விண்ணப்பித்த 3 நாட்களில் அனுமதி வழங்கப்படும் என்று தமிழக அரசு தகவல் அளித்தது. சிலைகள் வைக்கும் இடத்துக்கான மின் இணைப்பை வீடுகள், கடைகளில் பெற ஆட்சேபமில்லை என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
விநாயகர் சிலை பந்தலுக்கு மின்சார இணைப்புகளை நேரடியாக கொக்கி போட்டு எடுக்க கூடாது என்றும் அவ்வாறு திருட்டுத்தனமாக மின்சாரம் எடுத்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிபதி எச்சரித்தார். பின்னர் விநாயகர் சதுர்த்தி தொடர்பாக விதிக்கப்பட்ட நிபந்தனைகளை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பை ஒத்திவைத்தார்.
இந்த வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான தமிழக அரசு வெளியிட்ட அரசாணைக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். உயர்நீதிமன்ற உத்தரவுப்படியே நிபந்தனைகள் வகுக்கப்பட்டிருப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட 2 பொதுநல வழக்குகளையும் தள்ளுபடி செய்தனர்.
விதிகளை எதிர்த்து மற்ற அமைப்புகள் சார்பில் தொடரப்பட்ட வழக்குகள் மீதான விசாரணை நாளை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #GaneshChaturthi #GaneshIdols #HC
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் வைப்பதற்கும், பூஜைகள் முடிந்த பிறகு சிலைகளை கரைப்பதற்கும் பல்வேறு நிபந்தனைகள் விதித்து அரசாணை வெளியிடப்பட்டது. இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரியும், நிபந்தனைகளை தளர்த்தக் கோரியும் உயர்நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது விநாயகர் சிலைகள் வைக்க ஒற்றை சாளர முறைப்படி, விண்ணப்பித்த 3 நாட்களில் அனுமதி வழங்கப்படும் என்று தமிழக அரசு தகவல் அளித்தது. சிலைகள் வைக்கும் இடத்துக்கான மின் இணைப்பை வீடுகள், கடைகளில் பெற ஆட்சேபமில்லை என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
விநாயகர் சிலை பந்தலுக்கு மின்சார இணைப்புகளை நேரடியாக கொக்கி போட்டு எடுக்க கூடாது என்றும் அவ்வாறு திருட்டுத்தனமாக மின்சாரம் எடுத்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிபதி எச்சரித்தார். பின்னர் விநாயகர் சதுர்த்தி தொடர்பாக விதிக்கப்பட்ட நிபந்தனைகளை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பை ஒத்திவைத்தார்.
இந்த வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான தமிழக அரசு வெளியிட்ட அரசாணைக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். உயர்நீதிமன்ற உத்தரவுப்படியே நிபந்தனைகள் வகுக்கப்பட்டிருப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட 2 பொதுநல வழக்குகளையும் தள்ளுபடி செய்தனர்.
விதிகளை எதிர்த்து மற்ற அமைப்புகள் சார்பில் தொடரப்பட்ட வழக்குகள் மீதான விசாரணை நாளை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #GaneshChaturthi #GaneshIdols #HC
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆண்டிப்பட்டி தாலுகாவில் 105 இடங்களில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் வைத்து பிரதிஷ்டை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது
ஆண்டிப்பட்டி:
விநாயகர் சதுர்த்தி வருகிற 13-ந்தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதற்காக தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவில் இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மூலம் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆண்டிப்பட்டி தாலுகாவில் 105 இடங்களில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் வைத்து பிரதிஷ்டை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக திருச்சியில் இருந்து முதற்கட்டமாக ஆண்டிப்பட்டி நகருக்கு 35 விநாயகர் சிலைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அனைத்து சிலைகளும் வந்த பின்னர் அந்தந்த பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படும் என்று கூறப்படுகிறது.

தமிழக அரசு விநாயகர் சிலைகளை நிறுவி வழிபடுவது தொடர்பாக உருவாக்கி வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகளில் 17 விதிமுறைகள் மிக மிக கடுமையாக இருப்பதாக இந்து அமைப்புகள் அதிருப்தி தெரிவித்துள்ளன. #VinayagarChathurthi
இந்துக்களின் பண்டிகைகளில் நாடு முழுவதும் மிக விமர்சையாக நடத்தப்படும் பண்டிகையாக விநாயகர் சதுர்த்தி திருவிழா திகழ்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு லட்சக்கணக்கான சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. அவை வழிபாடு செய்யப்பட்டு பிறகு கடலில் கரைக்கப்படுகிறது.
மராட்டிய மாநிலம் மும்பையில்தான் விநாயகர் சதுர்த்தி திருவிழா மிக மிக கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது. அதற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி திருவிழா அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இத்தனைக்கும் தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி திருவிழா தொடங்கி சுமார் 35 ஆண்டுகள்தான் இருக்கும்.
தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி திருவிழாவையொட்டி விநாயகர் சிலைகளை ஆங்காங்கே நிறுவி வழிபாடு செய்யும் வழக்கத்தை இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன் அறிமுகம் செய்தார். முதலில் சென்னை திருவல்லிக்கேணியில் இந்த விழா தொடங்கப்பட்டது. நாளடைவில் விநாயகர் சிலைகளை நிறுவும் வழக்கம் சென்னையில் மற்ற பகுதிகளுக்கும் பரவியது.
ஆண்டுக்கு ஆண்டு விநாயகர் சிலைகள் நிறுவப்படுவது அதிகரித்தது. இதையடுத்து கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் மட்டுமின்றி தமிழ்நாட்டின் இதர நகரங்களுக்கும் விநாயகர் சிலை வழிபாடு பரவியது. தற்போது கடந்த ஓரிரு ஆண்டுகளாக தமிழ்நாட்டின் முக்கிய ஊர்கள் அனைத்திலும் விநாயகர் சிலைகளை நிறுவி விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடும் பழக்கம் உருவாகி இருக்கிறது.
கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் சுமார் 1 லட்சம் விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டன. சென்னையில் மட்டும் சுமார் 6 ஆயிரம் சிலைகளை நிறுவி வழிபாடுகளை நடத்தினார்கள். இந்த ஆண்டு தமிழ்நாடு முழுவதும் சுமார் 1 லட்சத்து 25 ஆயிரம் விநாயகர் சிலைகள் நிறுவி விநாயகர் சதுர்த்தியை கொண்டாட பல்வேறு இந்து அமைப்புகள் ஏற்பாடுகள் செய்துள்ளன.
இந்த ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி திருவிழா அடுத்த மாதம் (செப்டம்பர்) 13-ந்தேதி நடைபெற உள்ளது. அதற்கு இன்னும் 2 வாரங்களே உள்ளன. பொதுவாக கடந்த ஆண்டுகளில் விநாயகர் சதுர்த்திக்கு ஒரு மாதத்திற்கு முன்பே எந்தெந்த இடங்களில் விநாயகர் சிலைகள் நிறுவப்படும் என்பது முடிவாகி விடும்.
அதற்கேற்ப விநாயகர் சிலைகளுக்கு ஆர்டர்கள் கொடுத்து அதற்கென அரங்கம் அமைக்கும் பணிகளை தொடங்கி விடுவார்கள். பூஜைக்கான ஏற்பாடுகளும் முன்னதாகவே செய்யப்பட்டு விடும். ஆனால் இந்த ஆண்டு இந்த ஏற்பாடுகளில் திடீர் இடையூறுகள் ஏற்பட்டுள்ளது.
விநாயகர் சிலைகள் தமிழ்நாடு முழுவதும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் போக்கு தமிழக காவல் துறையில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக விநாயகர் சிலைகளை நிறுவி வழிபடும் ஏற்பாட்டாளர்கள் அந்த சிலைகளை கடற்கரைக்கு எடுத்து சென்று கரைக்கும்போது நடத்தும் ஊர்வலம் போலீசாருக்கு பெரும் சவாலை கொடுக்கிறது.
விநாயகர் ஊர்வலத்தில் பங்கேற்கும் இளைஞர்கள் கட்டுப்பாட்டை இழந்து விடக்கூடாது என்பதில் போலீசார் மிக மிக கவனம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்வதற்கு 24 விதமான புதிய கட்டுப்பாடுகளை போலீசார் விதித்துள்ளனர்.
விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபடுவதற்கு புதிய விதிகளை உருவாக்க வேண்டும் கடந்த ஆண்டே தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. அதன்படி கடந்த 9-ந்தேதி தமிழக அரசு விநாயகர் சிலைகள் தொடர்பாக இந்த புதிய விதிகளை உருவாக்கி வெளியிட்டுள்ளது. சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அளித்துள்ள பரிந்துரையின் அடிப்படையில் இந்த புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
24 விதிமுறைகளில் 17 விதிமுறைகள் மிக மிக கடுமையாக இருப்பதாக இந்து அமைப்புகள் அதிருப்தி தெரிவித்துள்ளன. குறிப்பாக 7 நிபந்தனைகளை ஏற்கவே இயலாது என்று விநாயகர் சிலைகள் வழிபாட்டு குழுக்கள் தெரிவித்துள்ளன. இந்த நிபந்தனைகளை விலக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
புதிய விதிமுறைகளை தளர்த்தி ஏற்கனவே உள்ள பழைய நடைமுறைப்படி விநாயகர் சிலைகளை வழிபட அனுமதி வழங்க வேண்டும் என்று இந்து அமைப்புகள் கோரிக்கைகள் விடுத்துள்ளன. இது தொடர்பாக இந்து அமைப்புகள் சில அதிருப்திகளை சுட்டிக்காட்டி உள்ளன.
இந்து அமைப்புகளுக்கு அதிருப்தி அளித்துள்ள அந்த புதிய விதிமுறைகளில் சில வருமாறு:-
* விநாயகர் சிலைகளை முழுக்க முழுக்க களிமண்ணால் மட்டுமே செய்ய வேண்டும். ரசாயன கலவைகளை ஒருபோதும் சேர்க்க கூடாது.
* தண்ணீரில் கரையாத ரசாயன வண்ணங்களை விநாயகர் சிலைகள் மீது பூசக்கூடாது. அவை கண்டிப்பாக தடை செய்யப்படுகிறது.
* விநாயகர் சிலைகள் மிக உயரமான அளவுக்கு இருக்கக்கூடாது. 10 அடிக்கு மேல் செய்யப்படும் விநாயகர் சிலைகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.
* விநாயகர் சிலைகள் வைக்கப்படும் இடங்களில் முறையான கூரைகள் அமைக்கப்பட வேண்டும். அந்த கூரைகள் தீப்பிடிக்காத பொருட்களால் அமைக்கப்பட்டு இருக்க வேண்டும்.
* விநாயகர் சிலைகளை ஆன்மிக தலங்கள், ஆஸ்பத்திரிகள், கல்வி கூடங்கள் அருகில் அமைக்கக்கூடாது.
*விநாயகர் சிலைகள் வைக்கப்படும் இடங்களில் எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவாகவே அல்லது எந்த மத அமைப்புகளுக்கும் ஆதரவாகவோ போர்டுகள் வைக்கப்படக்கூடாது.
* விநாயகர் சிலைகள் நிறுவி வழிபாடுகள் செய்த பிறகு 5 நாட்களுக்குள் அவற்றை எடுத்துச் சென்று கடலில் கரைத்து விட வேண்டும்.
இப்படி 24 புதிய விதிகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இவை ஏற்புடையவதாக இல்லை என்று பல்வேறு இந்து அமைப்புகளும் கூறி வருகின்றன. குறிப்பாக விநாயகர் சிலைகள் வைப்பதற்கு தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும் என்ற விதிமுறை மிகுந்த இடையூறு ஏற்படுத்துவதாக இந்து முன்னணி நிர்வாகிகள் கூறுகிறார்கள்.
மிக குறுகிய காலத்திற்குள் உள்ளாட்சி அமைப்புகள், காவல் நிலையம், நெடுஞ்சாலைத் துறை, மின்சார வாரியம், மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றிடம் இருந்து எப்படி தடையில்லா சான்றிதழ்களை பெற முடியும் என்று இந்து முன்னணி நிர்வாகிகள் கேட்கிறார்கள். எனவே கடந்த ஆண்டு நடைமுறையை பின்பற்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசின் புதிய விதிமுறைகளில் சில இந்துக்களின் அடிப்படை உரிமைகளை தடுப்பதாக அதிருப்தி ஏற்பட்டுள்ளது. விநாயகர் சிலைகளுக்கு பூஜை நடத்துவதில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டை இதற்காக அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
விநாயகர் சிலைகளுக்கு எப்போது பூஜை நடத்த வேண்டும் என்பதை சிலைகளை நிறுவி உள்ளவர்கள்தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர அரசு முடிவு செய்யக்கூடாது என்பது இந்து அமைப்புகளின் வேண்டுகோளாக உள்ளது. இந்த சிக்கல்களுக்கு உடனடி தீர்வு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு விநாயகர் சிலைகளை ஆண்டுதோறும் நிறுவி வழிபட்டு வரும் பக்தர்களிடம் எழுந்துள்ளது. #VinayagarChathurthi

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கரூரில் பல வடிவங்களில் விநாயகர் சிலைகள் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கரூர்:
ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. விநாயகரின் பிறந்த தினமாக கருதப்படும் அன்றைய நாளில் களிமண் உள்ளிட்டவற்றால் செய்யப்பட்ட விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டு கடல், ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு அடுத்த மாதம் (செப்டம்பர்) 13-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட இருக்கிறது.
இதையொட்டி கரூர் திருமாநிலையூர் சுங்ககேட் பகுதியில் பொம்மைகள் செய்து பிழைப்பு நடத்தி வரும் ராஜஸ்தானை சேர்ந்த சத்ராராம் என்கிற தொழிலாளி தனது குடும்பத்துடன் சேர்ந்து தற்போது விநாயகர் சிலைகளை பலவடிவங்களில் தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
வீட்டில் வைத்து பூஜை செய்யும் வகையில் சிறிய அளவிலான சிலைகள் மற்றும் 4 அடியிலிருந்து 9 அடி உயரம் வரையிலான பெரிய சிலைகளும் தயாரித்து விற்பனைக்கு வைத்துள்ளனர். பெரிய விநாயகர் சிலைகள் ரூ.15 ஆயிரம், ரூ.12 ஆயிரம், ரூ.10 ஆயிரம், ரூ.8 ஆயிரம் என்கிற விலையில் விற்கப்படுகின்றன. கையில் தூக்கி செல்லும் வகையிலான சிறிய சிலைகள் ரூ.150 முதல் ரூ.500 வரை விற்பனை செய்யப்படுகின்றன.
மேலும் சாக்பீஸ் தயாரிக்க பயன்படுத்தும் மாவினை கொண்டு இந்த சிலைகள் உருவாக்கப்படுவதால் நீர்நிலைகளில் கரைக்கும் போது சுற்றுப்புறத்திற்கு தீங்கு ஏற்படாது என சிலைகள் தயாரிக்கும் தொழிலாளர்கள் தெரிவித்தனர். பக்தர்களுக்கு பிடித்த வகையில் யானைமுக விநாயகர், வெற்றிவிநாயகர், எலி-புலியின் மேல் அமர்ந்திருக்கும் விநாயகர், ராஜவிநாயகர், சுயம்புவிநாயகர், கற்பக விநாயகர் என பல்வேறு வகையிலான சிலைகள் தயாரிக்கப்பட்டு வருவதால் கரூர், குளித்தலை, மாயனூர், நெரூர், வாங்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பக்தர்கள், கோவில் நிர்வாகத்தினர் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணியில் ஈடுபடும் தொழிலாளி சத்ராராமிடம் கேட்ட போது கூறியதாவது:-
ராஜஸ்தானை சேர்ந்த எங்களது குடும்பத்தினர் கடந்த சில ஆண்டுகளாக கரூரில் தங்கி கொலுபொம்மைகள் உள்ளிட்டவை செய்து தள்ளு வண்டியில் தெரு தெருவாக சென்று விற்று பிழைப்பு நடத்தி வருகிறோம். அந்த வகையில் தற்போது விநாயகர் சதுர்த்தி பண்டிகை வருவதையொட்டி விநாயகர் சிலைகள் தயாரிப்பில் இறங்கியுள்ளோம். திருச்சியிலிருந்து சாக்பீஸ் தயாரிக்கப்படும் மாவினை வாங்கி வந்து தண்ணீரில் கரைத்து லாவகமாக அச்சில் வார்த்து அதனை காயவைத்து சிலைகளாக உருவாக்கி வருகிறோம். பெரிய அளவிலான சிலைகளை தயாரிக்கும் போது அதன்உள்புற பகுதியில் தேங்காய்நார்கள் உள்ளிட்டவற்றை சேர்த்து அதன் கட்டமைப்பை வலிமையானதாக உருவாக்குகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதே போல் இந்து முன்னணி சார்பில் 108 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட இருப்பதையொட்டி கரூர் செட்டிப்பாளையம் பகுதியில் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. தற்போது அந்த சிலைகளுக்கு வர்ணம் தீட்டப்பட்டு அலங்கார ஒப்பனைகள் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது ஆகும்.

×

X